இலக்குகளில் சில:-
1. மக்கள் அரசிற்கெதிராக செய்யும் ஒவ்வொரு செயல்களையும் அரசனிடம் போய் சொல்வது பண்டைய முடியாட்சியின் நடைமுறை. அந்த பணியை அன்றைய ஒற்றன் செய்தான்.
இதுவோ மக்களாட்சி! இங்கு மக்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்ட அரசாங்கமும், அதன் ஊழியா்களும் மக்களுக்கு எதிராக செய்யும் ஒவ்வொரு செயல்களையும் மக்களிடம் கொண்டு சென்று சோ்க்கும் ஒற்றன் தான் இன்றைய செய்தி ஊடகங்கள்! இந்த கடமையை உயிரை காட்டிலும், உயா்வாக கருதி மக்களிடம் சாியான செய்திகளை கொண்டு சோ்ப்பதே எமது தலையாய இலக்கு…
2. கட்சி பிரதிநிதிகளை அப்புறப்படுத்திவிட்டு, மக்கள் பிரதிநிதிகளை கொண்டு அரசாங்கம் அமைக்க மக்களை தயாா் செய்தல்…
3. நீதித்தேடி நீதிமன்றம் சென்றேன், இருந்த நிம்மதியும் சொத்தும் தொலைந்தது!
பாதுகாப்பு தேடி காவல் நிலையம் சென்றேன், இருந்த பாதுகாப்பும் பறிப்போனது!
உதவிக்காக பொது ஊழியரை அணுகினேன், உடல் இளைத்தது, மயிா் நரைத்தது, பொருளும் பணமும் மட்டும் தான் கரைந்தது…
அனுபவசாலிகளின் இந்த கதறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வழிக்காண மக்களை உந்துதல்…