முக்கியச் செய்திகள்
  • நீதித்துறை பத்திரிகையின் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் 2024!!

இங்கு மட்டும் பரவாத கொரோனா? இவர்களுக்கு மட்டும் இல்லையோ கட்டுப்பாடு? முகக்கவசத்திற்கு கூட விதிவிலக்கோ! >> ஜனநாயக சக்ரவர்த்திகளிடம் ஓர் மேல்முறையீடு... ரணம்-2 >> பதற வைக்கும் நிஜம்... >> இன்னும் பிற...

முந்தைய செய்திகள்

காசாளா் பணி தருவதாக கூறி விளம்பரம் செய்து, காப்பு வைப்பு தொகை என்ற பெயாில் பணம் வாங்கி மோசடி செய்ததாக கோவை நெல்லை முத்து விலாஸ் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் நிறுவனத்தின் மீது மோசடி வழக்கு…

மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கும் தமிழக அரசின் முடிவில் தலையிட முடியாது என சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம், பொதுக்கூட்டம் நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் மெரினாவில் ஒருநாள் போராட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனை ஏற்க மறுத்த ஐகோர்ட், மனுவை தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து போராட்டத்திற்கு அனுமதி கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் அய்யாக்கண்ணு மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி அளிக்க முடியாது. மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கும் தமிழக அரசின் முடிவில் தலையிட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் ஜெயக்குமார் மீதான பாலியல் புகாரில் கவனமாக பரிசீலிக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக சட்ட வல்லுநர்களின் பார்வை – கைப்பேசியில் பதிவாகியிருக்கின்ற குரல் அமைச்சர் ஜெயக்குமாருடையது தானா? எந்த அலைப்பேசி எண்ணிலிருந்து எந்த எண்ணிற்கு அது பேசப்பட்டது? வெளியாகியுள்ள குரல் பதிவில் ஓரிடத்தில் கூட “உங்களால் தானே என் மகள் இந்த நிலையில் இருக்கின்றார்” என்பதை போன்று, ஆதங்கத்தோடு பேசியதாக தெரியவில்லை! தற்போது பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணிற்கு குழந்தையே பிறந்து விட்டது என்று கூறப்படும் இச்சூழ்நிலையில் கருத்தரித்து ஒரு மாதம் மற்றும் 8 நாட்களில் பேசப்பட்டதாக இக்குரல் பதிவில் தெரிய வருகின்ற நிலையில் இத்தனை மாதங்கள் கழித்து இந்த குரல் பதிவு வெளியிடப்பட்டதன் பின்னனி என்ன? பணம் பறிக்கும் நோக்கமா?

ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறு – தருண் அகர்வால் குழு அறிக்கை-

ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் மீண்டும் திறக்க சாதகமான அறிக்கையை, தருண் அகர்வால் குழு வழங்கியுள்ளது என்று அந்த நிறுவன வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மக்கள் நடத்திய போராட்டத்தின்போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். எனவே, கடந்த மே மாதம் 28ம் தேதி, ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது. இதை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து, மேகாலயா உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது தேசிய பசுமை தீர்ப்பாயம். விசாரணை நடத்திய பிறகு, தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவு தவறு என்று முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.


Related posts