சென்னை: எப்படி இருந்த புழல் ஏரி இப்படி ஆகிவிட்டது என்பது போல் ஒரு செயற்கை கோள் படம் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் போதிய பருவமழை பெய்யாததால் கோடை தொடங்குவதற்கு முன்பே வெப்பம் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில் தற்போது கோடையில் வீசி வரும் கடும் அனலால் நீர் நிலைகள் அனைத்து வற்றிவிட்டன. அதுபோல் சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் உள்ளிட்ட ஏரிகளும் முற்றிலும் வறண்டுவிட்டன. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது.
பொதுமக்கள் இரவு, பகல் பாராமல் பொதுமக்கள் தண்ணீர் தேடி அலைந்து வருகின்றனர். பெரும்பாலான இடங்களில் லாரி நீரை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த லாரிகள் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் சென்றுவிடுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.